12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பெண்கள் கமிட்டி தலைவர் கூறும் போது இந்திய நேபாள பெண்கள் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.