இந்த நிலையில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தவான், மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி இலக்கை நெருங்க உதவினர். ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களில் அவுட் ஆனாலும் தவான் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை தேடிக் கொடுத்தார்.