இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து பேட்டிங்!

புதன், 16 ஜூன் 2021 (19:12 IST)
இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து பேட்டிங்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரிஸ்டல் நகரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து சற்றுமுன் இங்கிலாந்து அணி 38 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் இங்கிலாந்து வீராங்கனை டாமி அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
இந்திய அணியின் தரப்பில் பூஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்