இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே பெங்களூரில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 16ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த நிலையில், முதல் நாளில் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணிவழக்கமான 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை அடுத்து, இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. சற்றுமுன் வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் அடித்து விளையாடி வருகிறார். விராட் கோலி அவருடன் இணைந்து விளையாடி வரும் நிலையில், அவர் ஐந்து ரன்கள் எடுத்துள்ளார்.