தொடக்க ஆட்டக்காரர்கள் அசத்தல் சதம் – வெஸ்ட் இண்டீஸுக்கு 388 ரன்கள் இலக்கு !

புதன், 18 டிசம்பர் 2019 (17:39 IST)
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதில் மீண்டும் டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஸ்கோர்களைக் குவித்தது.

இவ்விருவரும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 102 ரன்களில் அவுட் ஆக அடுத்து வந்த கோலி எதிர்பாராதவிதமாக டக் அவுட் ஆனார்.  அதன் பின்னர் அதிரடியில் புகுந்த ரோஹித் ஷர்மா 159 ரன்கள் மீண்டும் ஒரு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து ரேயாஸ் ஐயரும் (53) பண்ட்டும்(39)  அதிரடியாக வானவேடிக்கை காட்ட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் இந்திய அணி ஆட்டமுடிவில் 387 ரன்கள் சேர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்