இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணி லீக் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் மூன்று வெற்றி மற்றும் ஒரு டிராவோடு சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. இந்தியா லீக் போட்டிகளில் சீனாவை 7-2 என்றும், மலேசியாவை 5-0 என்றும், தென் கொரியாவை 3-2 என்றும் வென்றது. ஜப்பானுடனான போட்டியில் 1-1 என்று டிரா செய்தது.