என்னை உதவாக்கரை என நினைக்கிறார்கள்… ஆனால்? உணர்ச்சி வசப்பட்ட தாஹீர்!

சனி, 11 செப்டம்பர் 2021 (16:00 IST)
தென்னாப்பிரிக்க அணியின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் தன்னை அணி நிர்வாகத்தினர் உதவாக்கரை என்று நினைக்கிறார்கள் என உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி அனுபவம் பெற்ற வீரர்களான பாஃப் டு பிளசீஸ் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோருக்கு டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடமளிக்கப்படவில்லை. இதுகுறித்து ஆவேசமாக பேசியுள்ள தாஹீர் ‘நான் அணியில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நான் இன்னும் சோடை போகவில்லை. எல்லா லீக்குகளிலும் என் ஆட்டத்தை பார்க்கிறீர்கள். நான் ஸ்மித், பவுச்சருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை. பவுச்சர் கோச் ஆன பிறகும் கூட அவர் என்னை அழைக்கவில்லை.

நான் நாட்டுக்காக பல ஆண்டுகள் சேவை புரிந்துள்ளேன். என்னை அவர்கள் தேவையில்லை என நினைத்தால் நான் ஒன்று சொல்கிறேன். நான் ஓய்வு அறிவிக்க விரும்பவில்லை. 50 வயது வரை விளையாடுவேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்