ஹாட்ரிக் பதக்கம் மிஸ்ஸிங்.. பி.வி.சிந்து ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (10:16 IST)

பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் ஏராளமான இந்திய வீரர்கள், வீராங்கனைகளும் போட்டியிட்டு வரும் நிலையில் சில வீரர்கள், வீராங்கனைகள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அப்படியான ஒருவர்தான் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.

 

கடந்த 2016, 2020ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் தொடர்ந்து பதக்கங்களை வென்றார். இந்த ஒலிம்பிக்ஸிலும் அவர் பதக்கம் வென்றால் ஹாட்ரிக் பதக்கம் வென்ற சாதனையை படைப்பார்.

 

பேட்மிண்டன்ர் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் சீன வீராங்கனையை எதிர்கொண்ட பி.வி.சிந்து 19-21, 14-21 என்ற செட் கணக்கில் அவரிடம் தோல்வியை தழுவினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றான இதில் பி.வி.சிந்து தோல்வி அடைந்ததால் ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவரது ஹாட்ரிக் பதக்க கனவும் நிறைவேறாமல் போனது. பி.வி.சிந்துவின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், தொடர்ந்து போராடிய அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்