நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் இரு அணி வீரர்கள் சரிக்கு சமமாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி பத்தி ஒன்றில் எழுதிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தற்போது இருக்கும் இந்திய அணி முந்தைய இந்திய அணி போல இல்லை. முந்தைய இந்திய அணிகள் எதிரணி வீரர்களிடம் களத்திலும் பேச்சிலும் எளிதில் மடிந்து விடுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் அணி இரண்டு மடங்காக அதை திருப்பிக் கொடுக்கிறது என்று எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதுபற்றி வர்ணனையின் போது பேசிய சுனில் கவாஸ்கர் எந்த இந்திய அணியை நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் ஒருபோதும் எளிதில் மடிந்துவிடுவதில்லை. கடுமையாக போராடுவோம். வெற்றியும் பெற்றிருக்கிறோம். தோல்வியும் அடைந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் சொன்னது என்னை காயப்படுத்தி விட்டது. என்று கூறி இந்தியா இங்கிலாந்து தொடர்களின் புள்ளி விவரங்களை அடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மைக் ஆர்த்தர் இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார்.