சச்சினும் கோலியும் ஒன்னா?? கங்குலி கூற மறுத்த ரகசியம்!!

செவ்வாய், 21 நவம்பர் 2017 (16:20 IST)
இந்திய அணி கேப்டன் கோலியுடன் சச்சினை ஒப்பிட்டு பேசுவது, கோலியை அடுத்த சச்சின் என கூறுவதும் தற்போது வழக்கமான ஒன்றாக உள்ளது.

 
இந்நிலையில், இது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டாராம். 
 
இந்தியா வந்துள்ள இலங்கை அணி தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 
 
இதில் இந்திய அணி பவுலர்கள் வேகத்தில் மிரட்ட, கோலி மற்றும் சக வீரர்கள் தங்களது பங்கிற்கு பேட்டிங்கில் கலக்க இலங்கை அணி தட்டுத்தடுமாறி போட்டியை டிரா செய்தது.
 
கோலி, முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனாலும், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து சரியான பதிலடி கொடுத்தார். இது கோலியின் 50 சர்வதேச சதமாகும்.
 
இதனையடுத்து சர்வதேச அரங்கில் 100 சதங்கள் விளாசிய சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கங்குலி, இந்திய கேப்டன் விராட் கோலியையும் சச்சினையும் நான் ஒப்பிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு பின்னணியில் ஏதேனும் காரணம் உள்ளதா என்பது விளங்கவில்லை. 
 
ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கோலிக்கு வானமே எல்லையாக இருக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்