செல்ஃபி எடுக்க தெரியாத கங்குலி....

செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:49 IST)
இந்திய அணி முன்னாள் வீரர் சவுரவ் கங்குலிக்கு செல்பி எடுக்க தெரியாது என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. இந்திய அணி முன்னேறி வருவதற்கு காரணமாக இருந்த பலரில் இவரும் ஒருவர். 
 
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போதும் கமெண்ட்ரி, கிரிக்கெட் விவாதங்கள், கிரிக்கெட் தொடர்பான விமர்சனங்கள் ஆகியவற்றில் தனது பங்கை செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. கங்குலி தன் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டுள்ளார். அப்போது அவர்களுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். 
 
ஆனால் செல்பி எடுக்க தெரியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். தன் மகளுடன் தனியாக செல்ஃபி எடுத்த போது செல்பி எடுக்க தெரியாமல் முழித்து இருக்கிறார். அதன்பின்னர் கங்குலி மகள் சானா அவருக்கு செல்பி எடுக்க கற்றுக் கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்