இதுவரை 6 சீசன்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 7வது சீசன் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை, சேலம், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் இந்த போட்டியில் நடத்தப்பட உள்ளது என்பதும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மைதானத்தில் இம்முறை எந்த ஆட்டமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் களம் காணுகின்றன.