சென்னையில் கார் பந்தயம் கடந்த ஆண்டு டிச. 9, 10 தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.