3வது நாளாக தங்கம் விலை சரிவு.. மீண்டும் ரூ.55000க்குள் ஒரு சவரன்.. சென்னை நிலவரம்..!

Mahendran

சனி, 20 ஜூலை 2024 (11:09 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக குறைந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி மீண்டும் தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரத்துக்குள் இறங்கி வந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய்   6,835 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து  ரூபாய் 54,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,305 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்