இந்த ஆண்டின் பணக்கார விளையாட்டு வீரர்கள்; மெஸ்சியை பின்னுக்கு தள்ளிய வீரர்!

ஞாயிறு, 13 ஜூன் 2021 (12:22 IST)
2021ம் ஆண்டிற்கான அதிக சம்பளம் பெற்ற வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்சியை பின்னுக்கு தள்ளியுள்ளார் தற்காப்பு கலை வீரர் ஒருவர்.

ஆண்டுதோறும் அதிக பணம் ஈட்டிய மில்லியனர் விளையாட்டு வீரர்களின் டாப் 50 பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்த பட்டியலில் கால்பந்து வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோ இடையே போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள டாப் 50 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் அயர்லாந்தை சேர்ந்த தற்காப்பு கலை வீரர் கானர் மெக்ரெகோர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் லியோனல் மெஸ்சியும், மூன்றாவது இடத்தில் ரொனால்டோவும் உள்ளனர். மற்றுமொரு கால்பந்து வீரரான நெய்மார் 6வது இடத்திலும், பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 7வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் பெரும்பாலும் கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து வீரர்களே அதிக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்