பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை எட்டி உதைத்த வீரர் கைது!

புதன், 6 அக்டோபர் 2021 (08:01 IST)
பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை எட்டி உதைத்த வீரர் கைது!
பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் நடுவரை ஏற்றிவைத்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ரியோ கிராண்டே என்ற இடத்தில் நேற்று சா பாலோ என்ற அணியும், குராணி என்ற அணியும் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரிபிரோ ரோட்ரிகோ என்ற வீரரும் நடுவராக இருந்த கிரிவெல்லரோ என்பவரும் தடுமாறி விழுந்தார்கள்.
 
இதனால் கோபமடைந்த ரிபிரோ ரோட்ரிகோ நடுவரை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது இதில் நடுவர் படுகாயம் அடைந்து மயங்கி மயங்கி சரிந்தார். இதனை அடுத்து ரிபிரோ ரோட்ரிகோ என்ற வீரரி அவை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் நடுவரை கால்பந்து வீரர் ஒருவர் எட்டி உதைத்ததால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்