முதல் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (14:45 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி,  இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக  3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1 -0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.2 வது இன்னிங்ஸில் 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 
 
அதன்படி முதல் இன்னிங்ஸில் 502 ரன்களுக்கு இந்திய அணியும், 431 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியும் ஆல் அவுட் ஆனது.பின்னர் 2 வது இன்னிங்ஸில் 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி 395 ரன்களை இலக்காக நிர்ணயித்து. 395 ரன்கள் இலக்காகக் கொண்டு  களமிறங்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்நிலையில் 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை விழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
 
விசாகபட்டிணத்தில் நடைபெற்ற இந்த முதல்டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார்.
 
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையே அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்