பின்னர் தனது பேட்டிங்கை தொடங்கிய தென் ஆஃப்ரிக்கா அணி, 8 விக்கெட்டுகளுக்கு 385 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 4 ஆம் நாள் தொடங்கிய ஆட்டத்தில், 431 ரன்கள் குவித்து தென் ஆஃப்ரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் விளையாடிய மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோஹித் ஷர்மா 176 ரன்களும் விளாசித் தள்ளியது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இன்னிங்கிஸில் இந்திய அணி பேட்டிங் செய்து 4 விக்கேட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தற்போது 395 ரன்கள் இலக்கோடு தென் ஆஃப்ரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.