மகளிர் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதின. இதில் டெல்லி அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் நான்கு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய டெல்லி அணியின் லேனிங் 70 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.