மகளிர் ஐபிஎல்: டாஸ் வென்ற பெங்களூரு அதிரடி முடிவு..!

திங்கள், 6 மார்ச் 2023 (19:04 IST)
மகளிர் ஐபிஎல்: டாஸ் வென்ற பெங்களூரு அதிரடி முடிவு..!
மகளிர் ஐபிஎல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் அணி வீராங்கனைகள் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை அணி ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி ஒரு போட்டியில் விளையாடிய அந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் புள்ளிகள் ஏதும் இன்றி நான்காவது இடத்தில் உள்ளது. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று புள்ளி பட்டியலில் இடம்பெருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்