இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி விற்பனை செய்யப்படும் என்றும் அன்றைய தினம் காலை 10.40 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது
இந்த போட்டிக்கான டிக்கெட் ஆரம்பகட்ட விலை ரூ.1700 என்றும் அதன் பிறகு 2500, 4000, 3500, 6000 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது..