தற்போது அபுதாபியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்த போட்டியின் 7வது ஓவரில் கிளாடியேட்டர் அணியின் டேவிட் மில்லர் ஒரு பந்தை வேகமாக அடித்ததால் அந்த பந்து பவுண்டரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டுப்லஸ்ஸிஸ் அதை தடுக்க ஓடினார். அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் காலில் அவரது தலை மோதியது