சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா!

செவ்வாய், 11 மே 2021 (19:26 IST)
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா!
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சென்னை அணியில் மூன்று பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மைக் ஹசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டெல்லியில் இருந்த போதே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மைக் ஹசி உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்