இன்று முதல் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 18 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பார்த்திவ் பட்டேல் கடந்த சில ஆண்டுகளாக தனது திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனக்கு கேப்டனாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக தனது முதல் கேப்டன் கங்குலி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் 18 வயதில் கிரிக்கெட்டில் நுழைந்த தனக்கு பிசிசிஐ நல்ல ஊக்கமும் வாய்ப்பும் கொடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்