கோப்பையை கையில் ஏந்திய நடராஜன்.. ’’நீதான் ஆட்டநாயகன் ‘’.- புகழாரம் சூட்டிய ஹர்த்திக் பாண்டியா

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (20:23 IST)
ஆஸ்திரேலியா போன்ற கடினமான களம் கொண்ட மண்ணில் விளையாடிய முதல் தொடரில் உங்களின் உழைப்பு தெரிந்தது... அதனால் நீங்கள்தான் தொடர் நாயகன் எனத் தெரிவித்து, நடராஜனிடம்  டி-20 வெற்றிக் கோப்பையைக் கொடுத்தார் ஹர்த்திக் பாண்டியா. இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பௌலிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதனையடுத்து இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் மூன்றாவது போட்டியை இந்திய அணி வெல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டி-20 போட்டின் ஆட்டநாயகனாக ஹர்த்திக் பாண்டியா  தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய ஹர்த்திக் பாண்டியா ''என்னைவிட இந்த விருதுக்குச் சரியனாவர் நடராஜன் என்று தெரிவித்தார்.

மேலும், நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள்… ஆஸ்திரேலியா போன்ற கடினமான களம் கொண்ட மண்ணில் விளையாடிய முதல் தொடரில் உங்களின் உழைப்பு தெரிந்தது...அதனால் நீங்கள்தான் தொடர் நாயகன் எனத் தெரிவித்து, அவரிடம் டி-20 வெற்றிக் கோப்பையைக் கொடுத்தார்.

இவர்கள் இருவரும் நின்று எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும், ரசிகர்கள் ஹர்த்திக் பாண்டியாவிடம், இந்தத் தொடர்நாயகன் விருதுக்க்குத் தகுதியானவர் என்று கூறி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

 
 இன்றைய போட்டியில் மைதானத்தில் தமிழில் பேசினார் நடராஜன்.அதில், ஐபிஎல் போட்டியில் எப்படி விளையாடினேனோ அப்படியே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடினேன்,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்