இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆடுகளத்துக்கு வெளியே இருந்தபடி அணியை அவர் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும் அணியின் ஆலோசகராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாக டி-20 அணியை அறிவித்தபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா கூறினார்.