இந்நிலையில் கொல்கததாவில் நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு எந்தவித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.