தவறான நகர்த்தலுக்காக சிறுவனின் விரலை உடைத்த ரோபா… செஸ் போட்டியில் பரபரப்பு!

திங்கள், 25 ஜூலை 2022 (10:06 IST)
ரஷ்யாவில் நடந்த செஸ் போட்டியில் ரோபோவுடன் அந்த சிறுவன் போட்டி போட்டு விளையாடியுள்ளார்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் “மாஸ்கோ செஸ் ஓபன் போட்டித் தொடர்” நடந்து வருகிறது. அதில் கிறிஸ்டோஃபர் எனும் 9 வயது சிறுவன் ரோபோ ஒன்றோடு விளையாடியுள்ளார். அப்போது ரோபோவின் காய் நகர்த்தலுக்கு காத்திராமல் அவர் தன்னுடைய அடுத்த மூவ்-ஐ செய்தபோது அவரின் விரலைப் பிடித்து அழுத்தியுள்ளது அந்த ரோபோ. சிறுவன் வலியில் துடிக்க உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சிறுவனின் விரல் முறிந்துள்ளது.

இந்த சம்பவம் செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் செஸ் போட்டிகளில் ரோபோக்களின் பங்களிப்பு தேவையில்லை எனக் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்