சென்னை மீண்டும் முதலிடம்: ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விபரங்கள்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (06:57 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முப்பத்தி எட்டாவது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ததை எடுத்து அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20வது ஓவரில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை அணியை போலவே டெல்லி அணியும் 16 புள்ளிகள் பெற்று இருந்தாலும் ரன் ரேடி அடிப்படையில் அந்த அணிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலில் கடந்த சில வாரங்களாகவே சென்னை மற்றும் டெல்லி அணிகள் மாறி மாறி முதல் இடத்தைப் பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்