ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஷான் மார்ஷின்(133) அதிரடி சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (48) மற்றும் ஸ்டாய்னிஸ் (29) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் ஆஸி ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அதையடுத்து 299 ரன்கள் என்ற கடின இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித்தும் தவானும் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் (43) மற்றும் தவான் (32) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ராயுடு மற்றும் தோனியோடு ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. சிறப்பாக விளையாடிய கோஹ்லி தனது 39 சதத்தை நிறைவு செய்தார். கோஹ்லி சேஸிங்கின் போது அடிக்கும் 24 ஆவது சதம் இதுவாகும்.