சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: தலைமை பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்
சனி, 3 செப்டம்பர் 2022 (14:32 IST)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் பிரைன் லாரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் போட்டியின் அணிகளில் ஒன்றாக ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிரைன் லாரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் டாம் மூடி பயிற்சியாளராக இருந்த நிலையில் அவரது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது பிரையன் லாரா புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்திருப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது
ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆலோசகராக பிரைன் லாரா இருந்த நிலையில் தற்போது தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது