இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பிரேசில் அணிக்கு கேப்ரியல் (59), லூகாஸ் (67), அகஸ்டோ (86) கோல் அடித்து மிரட்டினர். இவர்களின் அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறினர்.
முடிவில், பிரேசில் அணி 7-1 என வெற்றி பெற்றது. அரிசோனாவில் ஈக்வடார், பெரு அணிகள் மோதிய மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.