உலகில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகள்: பிவி சிந்துவுக்கு எந்த இடம்?

புதன், 5 ஏப்ரல் 2023 (18:07 IST)
உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் இந்தியாவின் பிவி சிந்துக்கு 12-வது இடம் கிடைத்துள்ளது. 
 
உலக அளவில் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இடம்பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் செரீனா வில்லியம்ஸ், மூன்றாவது இடத்தில் எய்லீன் கூ என்ற பனிச்சறுக்கு வீராங்கனை இடம்பெற்றுள்ளனர். 
 
இந்த பட்டியலில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பிவி சிந்துவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது என்பதும் இவர் கடந்த ஆண்டு 58 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்