நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் சாய் பல்லவி!

சனி, 31 ஜூலை 2021 (10:30 IST)
நடிகை சாய் பல்லவி தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பின்னர் தமிழில் மாரி  2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த சாய்பல்லவி, இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்