நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியினரோ ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் அவருக்கு என்ன காயம் என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் ஏ கிரேடு 1 காயம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குணமடைய 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும். இந்த காயம் நாம் நினைப்பதை விட கூடுதலானது. இதனால் ரோஹித் ஷர்மா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.