ஆம்புலன்ஸில் செல்ல யாரும் இல்லை… அதனால் பலியான உயிர்- நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!

சனி, 31 அக்டோபர் 2020 (16:19 IST)
ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கியவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் அவருடன் யாரும் செல்ல முன் வராததால் பலியாகியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்தவர் அஜீஸ். இவர் ஒரு விபத்தில் அடிபடவே தலையில் ரத்தக் காயங்களுடன் ஆம்பூர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது காயத்தின் தீவிரத்தைப் பார்த்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு வேலூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அஜிஸுடன் செல்ல யாருமே இல்லை. இதனால் அஜிஸ் மருத்துவமனை வாசலில் வந்து அமர்ந்துள்ளார். அவரின் காயத்தைப் பார்த்த அங்கிருந்த சிலர் அவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.  அப்போது மருத்துவர்கள் கூட யாராவது ஆம்புலன்ஸில் செல்ல வேண்டும் என சொல்ல யாருமே முன்வரவில்லை. அதனால் அஜிஸ் மீண்டும் மருத்துவமனை வாசலிலேயே அமர்ந்து இருந்துள்ளார். ஆனால் ரத்தப் போக்கு அதிகமானதால் அஜிஸ் உயிரிழந்துள்ளார். இதனிடையே, அஜீஸ் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்