முதல் ஓவரிலே 2 விக்கெட்; அசத்திய மலிங்கா

சனி, 15 செப்டம்பர் 2018 (17:35 IST)
ஆசிய கோப்பை 2018 தொடரின் இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையேயான முதல் போட்டியில் மலிங்கா முதல் ஓவரிலே 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

 
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடரின் முதல் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடங்கியது. இதில் வங்காளதேசம் - இலங்கை ஆகிய அணிகள் மோதுகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாட தொடங்கியுள்ளது. மலிங்கா வெகு காலம் கழித்து இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார். 
 
ஆட்டத்தின் முதல் ஓவரை மலிங்கா வீசினார். ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் தற்போது வங்காளதேச அணிக்கு கடுமையாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்