ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி! ஆஸ்திரேலியா சாதனை..!

ஞாயிறு, 11 ஜூன் 2023 (17:48 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் வென்றதை அடுத்து ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற பெருமை ஆஸ்திரேலியா அணிக்கு கிடைத்துள்ளது. 
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி விளையாடிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஐசிசி தொடர்களின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. 
 
ஐசிசி தொடர்களின் டி20 உலக கோப்பையை ஒரு முறையும், ஒரு நாள் உலக கோப்பையை ஐந்து முறையும், சாம்பியன்ஷி டிராபி கோப்பையை இரண்டு முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஒரு முறையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதை அடுத்து ஐசிசி யின் கோப்பையை இன்னும் இந்திய அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்