நோவக் ஜோகோவிச்சிக்கு விசா ரத்து: ஆஸ்திரேலியா அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

வியாழன், 6 ஜனவரி 2022 (10:58 IST)
பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சிக்கு ஆஸ்திரேலிய அரசு விசாவை ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கலந்துகொள்ள இருந்தார் 
 
அதற்காக அவருக்கு ஆஸ்திரேலியா செல்லும் விசா அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென அந்த விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது 
 
டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை அளிக்காததால் விசா ரத்து செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு விளக்கமளித்துள்ளது. விசா ரத்து செய்யப்பட்டது காரணமாக நோவக் ஜோகோவிச் இரவு முழுவதும் செல்போன் விமான நிலையத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்