ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (12:17 IST)
சீனாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை வில்வித்தை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.



சீனாவில் நடந்து வந்த ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து தற்போது மாற்று திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் பெய்ஜிங்கில் நடந்து வருகின்றன. இதில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளிலும் இந்திய மாற்றுதிறனாளி வீர, வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இதில் வில்வித்தையில் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீராங்கனை சீதல் தேவி கலந்து கொண்டார். இதில் சிங்கப்பூர் வீராங்கனை அலீம் நுருடன் இறுதி போட்டியில் மோதிய சீதல் தேவி 144-142 என்ற கணக்கில் அலீம் நுரை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.

நேற்றைய ஆட்ட முடிவில் மொத்தமாக இந்தியா 82 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்