ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை எப்போது? ஐசிசி தகவல்!
புதன், 12 ஜூலை 2023 (15:36 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரின் அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை தொடர் இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என ஏற்கனவே பிசிசிஐ நிர்வாகி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளதால் இந்தியாவின் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது