இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தன்னிகரில்லாத வீரராக உள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் எந்தவொரு போட்டியிலும் சதமடிக்கவில்லை. அதனால் அவரின் ஆட்டத்திறன் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நாளை மோட்டீரா மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பார்.