ஆஷஸ் தொடர்.. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்.. 4வது ஓவரில் முதல் விக்கெட்..!

வெள்ளி, 16 ஜூன் 2023 (16:02 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
சற்றுமுன் வரை இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு ஆறு ஓவர்களில்   30 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 12 ரன்களில் அவுட் ஆகி உள்ளார்.
 
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள நிலையில் இந்த தொடரை வெல்லும் அணி எது என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்