ஆஷஷ் தொடரின் 4வது டெஸ்ட்.. இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

சனி, 22 ஜூலை 2023 (11:48 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஷ் தொடரில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் அடித்த நிலையில் இங்கிலாந்து முதல் என்ன விசில் 592 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே 189 ரன்களும் பெயர்ஸ்டோ99 ரன்களும் ஜோ ரூட் 84 ரன்களும் எடுத்தனர்.
 
 இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் தற்போது ஆஸ்திரேலியா விளையாடி வரும் நிலையில் அந்த அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில்  162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 6 விக்கெட்டை இழந்து விட்டால் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியடையும் வாய்ப்பு இருக்கிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்