மோடியைவிட கோலிக்கே பக்தர்கள் அதிகம்: ராமச்சந்திர குஹா...

திங்கள், 22 ஜனவரி 2018 (16:34 IST)
உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்தவரும் வரலாற்றறிஞரும் சமூக சிந்தனையாளருமான ராமச்சந்திர குஹா விராட் கோலியின் கிரிக்கெட்டை பாராடியுள்ளார். அதே நேரத்தில் அவரது ஆதிகத்தை குற்றம்சாட்டியுள்ளார். 
 
ராமச்சந்திர குஹா கூறியுள்ளதாவது, பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு வரை பல் வேறு விதங்களில் இந்திய அணி கேப்டன் கோலி தனது அதிகார பலத்தை பயன்படுத்தி வருகிறார்.
 
கடந்த கால, நிகழ்கால வீரர்களில் மிகவும் ஆட்படுத்தக்கூடிய ஒரு ஆளுமை கோலியிடம் உள்ளது. கபில்தேவ், தோனியும் சமமான அளவில் வலுவான ஆளுமைகளே ஆனால் கோலியிடம் உள்ள வார்த்தை ஆதிக்கம் இவர்களிடம் இல்லை.
 
பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவில் நான் பணியாற்றிய அந்த 4 மாதங்களில் கோலியின் ஆதிக்க சுயம் எந்த அளவுக்கு ஆழமாய் உள்ளது என உணர்ந்தேன். இந்திய அமைச்சரவையினர் நரேந்திர மோடியை வழிபடுவதை விட பிசிசிஐ அதிகாரிகள் கோலியை அதிகமாக வழிபடுகின்றனர். 
 
கோலியிடம் பிசிசிஐ அதிகாரிகள் முழுதாக பணிந்து போகின்றனர் கோலியின் அதிகார எல்லை அவரது வரம்புகளை மீறுவதாகவுள்ளது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்