இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கோலியின் அந்த கருத்தை நான் ஏற்கவில்லை. ஏனென்றால் கோலி போன்ற ஒருவர் இருக்கும்போது எப்படி மேட்ச் பாகிஸ்தான் கைக்கு செல்லும். அதுவும் கோலியே அப்படி பேசலாமா?. இத்தனைக்கும் கோலி அப்போது இரண்டு பந்துகள் கூட பேட் செய்யவில்லை. இந்த மனநிலைதான் அன்றைக்கு அணிக்கு தோல்வியை கொடுத்திருக்கும் எனக் கூறியுள்ளார்.