காஷ்மீரில் ஒரு சில மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இது குறித்து கூறிய போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என்றும் கூறியுள்ளார்