ஆறு வருடங்களுக்கு பின் இறுதி போட்டியில் மோதும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து

வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:43 IST)
இன்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் சென்று உள்ளது
 
இதனை அடுத்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின என்பதும் அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கடந்த 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத இருப்பதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்