வார்னிடம் இருந்து வந்த கடைசி டெக்ஸ்ட் மெஸேஜ்… கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சி!

வியாழன், 10 மார்ச் 2022 (16:32 IST)
ஆஸி கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பவுலர் கடந்த வாரம் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.

உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) சமீபத்தில் தாய்லாந்து சென்றபோது அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஷேன் வார்னின் இந்த திடீர் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மீளாத்துயரில அழ்த்தியுள்ளது. பலமுன்னாள் வீரர்களும் ஷேன் வார்னுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் ஷேன் வார்னுடன் 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இணைந்து விளையாடிய ஆஸி அணியின் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ஷேன் வார்ன் இறப்பதற்கு முன்பாக தனக்கு அனுப்பிய மெஸேஜ் குறித்து பேசி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இதுகுறித்து பேசிய அவர ‘சர்ச்சி (கில்கிறிஸ்ட்டின் செல்லப் பெயர்). நீ ராட் மார்ஷுக்கு செய்த அஞ்சலி அருமை. என்னுடைய குழந்தைப் பருவ ஹீரோ ராட் மார்ஷுக்கு அருகில் கூட நாம் வரவில்லை.’ என அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த மெஸேஜ் அவர் இறப்பதற்கு 8 மணிநேரத்துக்கு முன்பாக அனுப்பப் பட்டு இருக்கலாம் என்வும் கூறியுள்ளார்.

மேலும் ’ஷேன் வார்ன் பந்து வீச்சுக்கு விக்கெட் கீப்பிங் செய்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு மாஸ்டர் வேலை செய்யும் போது கூட இருந்த பாக்கியசாலி நான்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்