வார்னே அறையில் சிதறியிருந்த இரத்தம் இதனால்தான்… தாய்லாந்து போலிஸார் விளக்கம்!

திங்கள், 7 மார்ச் 2022 (10:34 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்ன் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என தாய்லாந்து போலிஸார் கூறியுள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சுற்றுலாவுக்காக நண்பர்களோடு தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஷேன் வார்னின் இந்த திடீர் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் ஆகியோரை மீளாத்துயரில அழ்த்தியுள்ளது. அந்நாட்டு அரசு மரியாதையோடு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் வார்ன் மரணம் குறித்து பேசியுள்ள தாய்லாந்து காவல்துறையினர் ‘ஏற்கனவே வார்னுக்கு இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை மற்றும ஆஸ்துமா இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

வார்ன் அறையில் ரத்த துளிகள் கிடந்தது பற்றி விளக்கமளித்த போலிஸார் ‘வார்னுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவரின் நண்பர்கள் CPR சிகிச்சைக்  கொடுத்து நெஞ்சை அழுத்தியுள்ளனர். அப்போது அவர் இருமியதில் ரத்தம் வெளிவந்து சிதறியுள்ளது.’ எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்